கொரோனாவால் இறந்த மூதாட்டி… அலட்சியத்தால் வீசிய துர்நாற்றம்…!

 

கொரோனாவால் இறந்த மூதாட்டி… அலட்சியத்தால் வீசிய துர்நாற்றம்…!

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் 11 மணி நேரம் தாமதத்துக்குப் பிறகு புதைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் இறந்த மூதாட்டி… அலட்சியத்தால் வீசிய துர்நாற்றம்…!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள முதியோர் இல்லத்தில் ஜெயலட்சுமி என்ற 84 வயது மூதாட்டி பராமரிக்கப்பட்டுவந்தார். இவர் கடந்த 12ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மூதாட்டியின் பாதுகாப்பு கருதி அவரது உறவினர் மேகநாதன் என்பவர் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று கவனித்து வந்தார் . இந்த சூழலில் மூதாட்டிக்கு கொரோனா இருப்பதை சுகாதாரத்துறையினர் தெரிவித்த நிலையில் அதிர்ச்சியில் மூதாட்டி ஜெயலட்சுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கொரோனாவால் இறந்த மூதாட்டி… அலட்சியத்தால் வீசிய துர்நாற்றம்…!

இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள் இல்லை என சுகாதாரத்துறையினர் அலட்சியமாக பதில் அளித்தனர்.அத்துடன் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் தொண்டு நிறுவனத்திற்கும் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதனால் மூதாட்டியின் உடல் சுமார் 11 மணி நேரம் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி வைக்கப்பட்டிருந்தது. இதனால் மூதாட்டியின் உடலிலிருந்து துர்நாற்றம் வெளியேற இதையடுத்து தனியார் தொண்டு நிறுவனத்திற்கு உடலை அடக்கம் செய்ய சுகாதாரத்துறை அனுமதி அளித்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் புதுச்சேரி சுகாதாரத்துறை மிகவும் அலட்சியப்போக்கு ஆக செயல்பட்டு வருவதாகவும், இதனால் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதுச்சேரியில் தீவிரமாக பரவி வருவதாகவும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.