Home தமிழகம் "குழந்தைகளுக்கு கொடுத்த போண்டாவில் இருந்த பிளேடு" - அதிர்ச்சி அடைந்த சப்- இன்ஸ்பெக்டர்!

“குழந்தைகளுக்கு கொடுத்த போண்டாவில் இருந்த பிளேடு” – அதிர்ச்சி அடைந்த சப்- இன்ஸ்பெக்டர்!

நிலக்கோட்டை அருகே குழந்தைக்காக வாங்கிய போண்டாவில் பிளேடு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கனகராஜ் என்பவருக்கு ஒரு மகனும், 2 பேத்திகளும் இருக்கிறார்கள். கனகராஜ் தனது பேத்திகளுக்காக, தான் வசித்து வரும் காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு எதிரே உள்ள கடை ஒன்றில் போண்டா வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அதனை பேத்திகளிடம் கொடுத்த கனகராஜ், ஒரு போண்டாவில் பிளேடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு கனகராஜ் தகவல் கொடுக்க, உடனே அதிகாரிகள் அந்த கடைக்கு விரைந்து சென்று கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, போண்டா போட்ட தொழிலாளி ஆஜாக்கிரதையுடன் செயல்பட்டது தெரிய வந்ததையடுத்து அவர்களை அதிகாரிகள் எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குழந்தைக்காக வாங்கப்பட்ட சாக்லேட் ஒன்றில் பீடி துண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஓரினச்சேர்க்கையில் தகராறு : வடமாநில இளைஞர் அடித்துக் கொலை!

ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் வீரபாண்டி...

“திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

தேர்தல் நெருங்கி விட்டதால் ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த...

அமைச்சர் விஜயபாஸ்கரின் ரௌடித்தனம் எல்லை மீறிப்போகிறது… காங்., எம்.பி. ஆவேசம்

அமைச்சர் விஜயபாஸ்கரின் ரௌடித்தனம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“புதுச்சேரியில் மதவெறி பற்றினால் தமிழகத்தையும் சேர்த்து எரித்துவிடும்” – ரவிக்குமார் எம்பி

புதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற நாம் அனுமதித்தால் தமிழ்நாடு வீட்டையும் சேர்த்து எரித்துவிடும் என மக்களவை எம்பி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி சமூக நல்லிணக்க...
Do NOT follow this link or you will be banned from the site!