மேலவை தலைவர் பதவி…. கர்நாடகாவில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எச்.டி. குமாரசாமி..

 

மேலவை தலைவர் பதவி…. கர்நாடகாவில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எச்.டி. குமாரசாமி..

கர்நாடகாவில் மேலவை துணை தலைவர் பதவியை குமாரசாமியின் மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் ஆதரவுடன் பா.ஜ.க. கைப்பற்றியது. இதனையடுத்து மேலவை தலைவர் பதவியை பா.ஜ.க.வின் ஆதரவுடன் குமாரசாமி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மேலவையின் துணை தலைவராக இருந்த மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் எஸ்.எல். தர்மேகவுடா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டதையடுத்து மேலவை துணைதலைவர் பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து மேலவை துணை தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. மேலவை துணை தலைவர் பதவிக்கு பா.ஜ.க.வில் சார்பில் நின்ற எம்.கே. பிரனேஷ் வெற்றி பெற்றார். குமாரசாமியின் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளித்ததால் எம்.கே.பிரனேஷ் எளிதாக வெற்றி பெற்றார்.

மேலவை தலைவர் பதவி…. கர்நாடகாவில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எச்.டி. குமாரசாமி..
பா.ஜ.க., மதசார்ப்பபற்ற ஜனதா தளம்

அடுத்தகட்டமாக கர்நாடக மேலவையின் தலைவராக இருக்கும் காங்கிரசின் பிரதாபச்சந்திர ஷெட்டியை நீக்க பா.ஜ.க. விரும்புகிறது. மேலும் தலைவர் இருக்கையில் அமர அவருக்கு தகுதியில்லை என்று பா.ஜ.க. கூறியது. தற்போது பிரதாபச்சந்திர ஷெட்டிக்கு எதிராக மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.

மேலவை தலைவர் பதவி…. கர்நாடகாவில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எச்.டி. குமாரசாமி..
காங்கிரஸ்

இந்த தீர்மானம் வெற்றி பெற்றால் தலைவர் பதவியிலிருந்து பிரதாபச்சந்திர ஷெட்டி விலகுவார். இதனையடுத்து மேலவை தலைவர் பதவிக்கு புதிதாக தேர்தல் நடைபெறும். அப்போது மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் பசவராஜ் ஹொரட்டி பா.ஜ.க.வின் ஆதரவுடன் மேலவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மேலவை தலைவர் பதவியில் காங்கிரஸ் இருக்கக்கூடாது என்பதற்காகவும், துணைதலைவர் பதவிக்கு ஆதரவு அளித்த நன்றி கடனுக்காகவும் குமாரசாமி கட்சி வேட்பாளரை பா.ஜ.க. கட்டாயம் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காங்கரசுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.