ரேஷன் கடை முன் பேனர் வைக்கக் கூடாது : நீதிமன்றம் உத்தரவு

 

ரேஷன் கடை முன் பேனர் வைக்கக் கூடாது : நீதிமன்றம் உத்தரவு

பொங்கல் பரிசு வழங்குவது பற்றி ரேஷன் கடைகள் முன்பு பேனர்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மக்களுக்கு ரூ.2,500 பணமும் பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுக்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்காமல், அதிமுகவினர் வழங்குவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டினர். தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பு பையில் அமைச்சர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரேஷன் கடை முன் பேனர் வைக்கக் கூடாது : நீதிமன்றம் உத்தரவு

சுய விளம்பரம் தேடிக் கொள்ள அமைச்சர்கள் தங்கள் புகைப்படத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாகவும் இது அரசாணைக்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்த போது, டோக்கன்களில் எந்த ஒரு கட்சி தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரேஷன் கடைகள் முன் அரசியல் கட்சியினர் பேனர்கள் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், ரேஷன் கடையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க தடை விதித்தனர். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் முதல்வர் மற்றும் மறைந்த முதல்வரின் படங்கள் இடம் பெறலாம் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை நீக்குமாறு உத்தரவிட்டனர்.