ஐபிஎல் 2021: சென்னையில் பயிற்சி எடுக்கும் பெங்களூரு அணி

 

ஐபிஎல் 2021: சென்னையில் பயிற்சி எடுக்கும் பெங்களூரு அணி

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடருக்கான முதல் அணியாக பயிற்சி முகாமை தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி , பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியை நடத்தியது.

ஐபிஎல் 2021: சென்னையில் பயிற்சி எடுக்கும் பெங்களூரு அணி

இதுகுறித்து பெங்களூர் அணியின் தலைமை நிர்வாகி மைக் ஹெசன் அளித்துள்ள பேட்டியில், “முதற்கட்டமாக இந்திய உள்ளூர் வீரர்களைக் கொண்டு பயிற்சியை மேற்கொண்டது பெங்களூர் அணி. அதன்பின் கடந்த 22ஆம் தேதி பேருந்தின் மூலம் பெங்களூரு வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் மார்ச் 28ஆம் தேதி தனிமைப்படுத்தல் முடிவடைந்து சென்னை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்குகிறார்கள், மேலும் இந்தியா -இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ள பெங்களூரு வீரர்களான விராத் கோலி,வாஷிங்டன் சுந்தர்,சாஹல்,சிராஜ் ஆகியோர் ஏப்ரல் 1ஆம் தேதி அணியில் இணைய உள்ளனர்.

வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரையில் நட்சத்திர வீரரான ஏபிடி வில்லியர்ஸ் மார்ச் 28ஆம் தேதியும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் ஏப்ரல் 2 தேதிக்குள் சென்னை வந்தடைகின்றனர், சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா தனக்கு திருமணம் நடைபெற உள்ளதால் ஓரிரு போட்டிகளில் விடுப்பு எடுத்து பிறகு அணியில் சேர உள்ளார். மேலும் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளரான சைமன் கேடிச்சும் இன்னும் ஓரிரு நாட்களில் அணியில் இணைய உள்ளார்” என தெரிவித்தார்.