50 சவரன் நகையை தவறவிட்ட பயணி… திருமண வீட்டாரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆட்டோ ஓட்டுநர்…

 

50 சவரன் நகையை தவறவிட்ட பயணி… திருமண வீட்டாரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆட்டோ ஓட்டுநர்…

சென்னை

சென்னையில் திருமண வீட்டார் தவறவிட்ட 50 சவரன் நகையை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் பால் பிரைட். இவரது மகளுக்கு இன்று குரோம்பேட்டையில் உள்ள அன்னை சர்ச்சில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, பால் பிரைட் ஆட்டோ மூலம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தனது மகளின் திருமணத்திற்காக பையில் வைத்திருந்த 50 சவரன் நகைகளை அவர் தவறிவிட்டார்.

வீட்டிற்கு சென்று பார்த்தபோது நகை பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த பால் பிரைட் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

50 சவரன் நகையை தவறவிட்ட பயணி… திருமண வீட்டாரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆட்டோ ஓட்டுநர்…

இந்த நிலையில், பால்பிரைட் பயணித்த ஆட்டோவின் ஓட்டுநர் சரவணகுமார், தனது வாகனத்தில் தவறிவிட்ட பையை திறந்துபார்த்துள்ளார். அதில் தங்க நகைகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் உடனடியாக குரோம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து, போலீசார் நகைகள் பால் பிரைட் குடும்பத்தினரும் ஒப்படைத்தனர்.

நகைகளை தவறவிட்ட அரை மணிநேரத்தில் உரியவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சரவணகுமாருக்கு மணமகள் வீட்டார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.