“திஷா ரவியை கைது செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது” : வேல்முருகன்

 

“திஷா ரவியை கைது செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது” : வேல்முருகன்

சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்திருப்பதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 83வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனாலும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு கேட்கவில்லை. இதனால் டெல்லியில் போராடும் விவசயிகளுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

“திஷா ரவியை கைது செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது” : வேல்முருகன்

அந்த வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் விவசாயிகளுக்கு ஆதரவாக சில கருத்துக்களை பதிவிட அதை, பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், மாணவியுமான திஷா ரவி, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதனால் அவர் மீது வன்முறையை தூண்டிவிடுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் அவரை பெங்களூரு வந்து கைது செய்தனர். திஷா ரவியின் கைதுக்கு மு.க .ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது,இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியை விடுவிக்கப்படுவதோடு,பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.