கொரோனா காலத்திலும் அசராத ஆப்பிள் வாட்ச்!

 

கொரோனா காலத்திலும் அசராத ஆப்பிள் வாட்ச்!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆப்பிள் நிறுவன மின்னணு பொருட்கள் தரத்தில் மட்டுமல்ல, வடிவமைப்பிலும் ஈர்ப்பதால் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளதுகொரோனா காலத்திலும் அசராத ஆப்பிள் வாட்ச்!ஒவ்வொரு ஆண்டும், ஆப்பிள் நிறுவனம் புதிதாக என்ன பொருளை வெளியிட உள்ளது என எதிர்பார்ப்பது தொழில்நுட்ப உலகில் சாதாரணமாக உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கி வைத்த இந்த தடத்திலேயே, தற்போது இருக்கும் தலைவர் டிம் குக் பயணித்து வருவதால் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை அப்படியே தொடர்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கொரோனா காலத்திலும் அசராத ஆப்பிள் வாட்ச்!

அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச், நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது, 2019 ஆம் ஆண்டைவிட 2020 ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மின்னணு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 68 லட்சம் வாட்ச்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டில் ஒருகோடியே 18 லட்சம் வாட்ச்கள் விற்பனையாகி உள்ளன.

கொரோனா காலத்திலும் அசராத ஆப்பிள் வாட்ச்!

உலகம் முழுவதும் மின்னணு ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் 21.6 சதவீத சந்தையை வைத்துள்ளது. அதற்கடுத்து ஜியோமி ஸ்மார்ட்வாட்ச் 24.5 சதவீத சந்தையை வைத்துள்ளது. ஆனால் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுடன் ஒப்பிடுகையில்ம் ஜியோமி வாட்ச்களை மக்கள் ஃபிட்னஸ் ஃபேண்டாக பயன்படுத்துவதாகவும் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து மின்னணு கருவிகளும் , நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் 4 கோடியே 14 லட்சம் பொருட்கள் விற்பனை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் இருக்கும் வரை , வளர்ச்சி சொல்லவே தேவையில்லை.