“வன்னியர்களுக்கு மட்டும் 10.5% பிரித்து தருவது அநீதி” : அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி கண்டனம்!

“வன்னியர்களுக்கு மட்டும் 10.5% பிரித்து தருவது அநீதி” : அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி கண்டனம்!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிப்பதற்கு அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

“வன்னியர்களுக்கு மட்டும் 10.5% பிரித்து தருவது அநீதி” : அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி கண்டனம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்கான போராட்டமும் சமீபத்தில் சென்னை பெருங்களத்தூரில் நடைபெற்று தகராறாக மாறியது. இதில் பாமகவை சேர்ந்தவர்கள் ரயில் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அத்துடன் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே கூட்டணி எனவும் ராமதாஸ் தரப்பு அதிமுகவிடம் கூறிவிட்டதாம். இந்த சூழலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அத்துடன் இந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ராமதாஸ் பெரும் வரவேற்பு தெரிவித்தார். அத்துடன் அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

“வன்னியர்களுக்கு மட்டும் 10.5% பிரித்து தருவது அநீதி” : அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி கண்டனம்!

இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிப்பதற்கு அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.பல தலைவர்கள் போராடிப் பெற்ற சமூக நீதியை தேர்தல் சுயநலத்திற்காக முதல்வர் குழி தோண்டிப் புதைத்தது அவர்கள் புகார் கூறியுள்ளனர். அத்துடன் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% பிரித்துத் தருவது சமூக அநீதி என்றும் கண்டன குரலை பதிவு செய்துள்ளனர்.