“முறைப்படி அழைத்தும் ஈபிஎஸ் பங்கேற்கவில்லை; ஆனால் அண்ணாமலையை பாராட்டுகிறேன் ” – அமைச்சர் துரைமுருகன்

“முறைப்படி அழைத்தும் ஈபிஎஸ் பங்கேற்கவில்லை; ஆனால் அண்ணாமலையை பாராட்டுகிறேன் ” – அமைச்சர் துரைமுருகன்

அதிமுக உரிய மரியாதை தராததால் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் திமுக பங்கேற்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“முறைப்படி அழைத்தும் ஈபிஎஸ் பங்கேற்கவில்லை; ஆனால் அண்ணாமலையை பாராட்டுகிறேன் ” – அமைச்சர் துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். இதில் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால் வரலாற்றை மாற்றி திமுக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

“முறைப்படி அழைத்தும் ஈபிஎஸ் பங்கேற்கவில்லை; ஆனால் அண்ணாமலையை பாராட்டுகிறேன் ” – அமைச்சர் துரைமுருகன்

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஜெயலலிதா படத்திறப்பு எங்களை அதிமுக அழைக்கவில்லை. சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்திறப்புக்கு எங்களுக்கு வெறும் அழைப்பிதழ் மட்டுமே வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு முறைப்படி அதிமுக அழைக்காததால் திமுக பங்கேற்கவில்லை. முதல்வர் கூறியதால் கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நான் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசி தவறாமல் வர வேண்டும் என கூறினேன்; சேலம் போய்க்கொண்டிருக்கிறேன், கலந்து பேசி சொல்கிறேன் என்றார்; போய்ச்சேர்ந்தவர், வரவில்லை என்பதை அழைத்த என்னிடம் சொல்லவில்லை. குடியரசு தலைவர், ஆளுநர் ஆகியோர் அருகில் எதிர்க்கட்சி தலைவரின் இருக்கை இடம்பெற முதல்வர் கூறியிருந்தார். ஆனால் விழாவில் தாம் பங்கேற்கவில்லை என்பதை சட்டப்பேரவை செயலாளரிடம் ஈபிஎஸ் தெரிவித்திருந்தார்.முறைப்படி அழைத்தும் அதிமுக பங்கேற்கவில்லை.விழாவில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறேன்” என்றார்.