கேப்டன் பொறுப்பால் பாலா அடைந்த ப்ளஸ், மைனஸ் – பிக்பாஸ் 81-ம் நாள்

 

கேப்டன் பொறுப்பால் பாலா அடைந்த ப்ளஸ், மைனஸ் – பிக்பாஸ் 81-ம் நாள்

லக்ஸரி பட்ஜெட் முடிவடைந்தபின், சிறந்த மற்றும் மோசமான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நாள் நேற்றைய எப்பிசோட். வழக்கமாக அடிதடி நடக்கும். நேற்றும் அது நடந்தது. முன்பை விடசற்று குறைவு என்றாலும் எதிர் கருத்துகள் வந்த இடம் ஆச்சர்யமாக இருந்தது. அதைக் கட்டுரையில் பார்ப்போம்.

பிக்பாஸ்

ரொம்ப நாள் கழித்து அஜித் பாட்டு போட்டிருக்காரு நம்ம பிக்கியின் தம்பி. இந்த சீசனில் அஜித் பாடல்கள் ரொம்ப ரொம்ப குறைவாகவே ஒலிக்க விட்டாரு… ஒருவேளை தம்பி தளபதி ஃபேன் போல.

கேப்டன் பொறுப்பால் பாலா அடைந்த ப்ளஸ், மைனஸ் – பிக்பாஸ் 81-ம் நாள்

பால் கேட்ச் பிடிக்கும் நான்காம் ரவுண்ட்டை அறிவித்தார். பிக்கி, இவ்வளவு செட் பண்ணிட்டோம். அதிலிருந்து இன்னொரு நாள் கண்டண்ட் எடுத்துக்கறோமே என்பதுபோல இருந்தது பிக்கியின் நேரடி வாய்ஸே. அதனால், தங்க நிற பந்துகளை அனுப்பினார். அதைப் பிடிப்பவர்களுக்கு ஒரு சக்தி வழங்கப்படுமாம்.

வரிசையில் முதலில் இடம்பிடித்த ரியோவுக்கு மூன்று, இரண்டாம் இடம் பிடித்த ரம்யாவுக்கு 2, மூன்றாம் இடம் பிடித்த சோம்க்கு 1 பந்துகள் எக்ஸ்ட்ராவாக வழங்கப்படுமாம்.

ஒருவரைக்கொருவர் மாற்றி, மாற்றி பாயிண்ட்டுகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அனிதாவுக்கு ஏராளமான பாயிண்டுகளை ஆரி வழங்கினார். பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அனிதாவோடு சமாதானமாக ஆகவே அவர் முயற்சி செய்கிறார் என்று இதைக் கொள்ளலாம். அல்லது சனிக்கிழமை கமலிடம் சண்டையை மறந்து இதெல்லாம் செய்தேன் என்று சொல்லிக்காட்ட லிஸ்ட் ரெடி பண்ணிக்கொண்டிருக்கலாம்.

கேப்டன் பொறுப்பால் பாலா அடைந்த ப்ளஸ், மைனஸ் – பிக்பாஸ் 81-ம் நாள்

ரம்யா தனக்கு வந்த மூன்றில் ஒன்றை மட்டுமே பிடித்தார். ஷிவானிக்கு தனக்கான ஒரே பந்தை கோட்டை விட்டார். ஆக, இறுதியாக ரியோவிடம் அதிக பாயிண்ட் இருந்தது. அதனால், அவர் நேரடியாக கேப்டன் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர் யார் என்பதைத் தேர்ந்தெடுப்பது நடந்தது. ரம்யா முதலில் வந்து கேபி மற்றும் ஆஜித்தைச் சொன்னார். அதை அப்படியே பலரும் வழி மொழிந்தனர்.

ஷிவானிக்கு ஃபேவர் காட்டப்பட்டது என அனிதாவின் குற்றச்சாட்டு பாலா மறுத்தார். ஆனால், கேபியும் அனிதாவின் குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரத்தைக் கொடுக்க திணறினார். இந்தக் கேப்டன் பொறுபு பாலாவுக்கு நிறைய பொறுமையையும் நிதானத்தையும் தந்திருக்கிறது. அதேநேரம், அவர் எங்கு தப்பு பண்ணுகிறார் என்பதையும் காட்டிக்கொடுத்திருக்கிறது.

கேப்டன் பொறுப்பால் பாலா அடைந்த ப்ளஸ், மைனஸ் – பிக்பாஸ் 81-ம் நாள்

சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்கள் ஓட்டு கேபிக்கு அதிகம் கிடைத்தது. ஆனால், அடுத்து ஒரே நிலையில் ஓட்டுகள் அனிதா, பாலா, ஆஜித், ஷிவானிக்கு கிடைத்தன. மீண்டும் ஓட்டெடுப்பில் கேபியும் கலந்துகொள்ள, அப்போது சும்மா இருந்த பாலா, முடிவு நெருங்குகையில் எதிர்ப்பு தெரிவிக்க, கடும் எதிர்ப்பை பதிவு செய்தது கேபி. அவரிடமிருந்து இப்போதுதான் எதிர்ப்பு குரல் அதிகம் கேட்கிறது. ஒருவேளை இந்த வாரம் அவரை வெளியேற்ற இருப்பதால், அவரின் ஃபுட்டேஜ்ஜை அதிகம் காட்டுகிறார்களோ என்னவோ!

இறுதியாக ஆஜித் இரண்டாம் நபராக ஆஜித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை கேப்டன் எனும் முறையில் கேப்டன் பாலா அறிவிக்கும்போது வொர்ஸ் பர்பாமிங் எனச் சொன்னதும் மீண்டும் சீறினார் கேபி. வொர்ஸ் இல்ல… போரீங் என. உடனே திருத்திக்கொண்டார். புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என நான் என்ன கனவா கண்டேன் என்பதுபோல பார்த்தார் பாலா.

கேப்டன் பொறுப்பால் பாலா அடைந்த ப்ளஸ், மைனஸ் – பிக்பாஸ் 81-ம் நாள்

சிறந்த போட்டியாளர்களுக்கு அதிகப் பேர் சொன்னது சோம்ஸ் அண்ட் ரம்யா. இறுதியாக தேர்வானது ஆரி அண்ட் சோம்ஸ். அடுத்த வார கேப்டன் பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் சோம்ஸ், ரியோ, ஆரி.

அடுத்து விளம்பரதார போட்டிகள் நடைபெற்றன. ஆரியின் அடுத்த படத்திற்கான ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமாவின் முதல் இலுமானிட்டி படம் என்று வேற இருந்தது. அநேகமாக பாரிசாலன் இன்னேரம், பிக்பாஸ் வீட்டுக்குள் இலுமினாட்டி என்று ஒரு வீடியோ ரெடி செய்திருப்பார். சுபம்.