“தமிழக முதல்வருக்கும் உரிய பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் நன்றி” : இயக்குநர் சீனு ராமசாமி

 

“தமிழக முதல்வருக்கும் உரிய பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் நன்றி” : இயக்குநர்  சீனு ராமசாமி

இயக்குநர் சீனு ராமசாமி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

800 பட விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்ததால் தனக்கு சிலர் மிரட்டல் விடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார். அதில், ‘முத்தையா முரளிதரன் குறித்த படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதியிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தமிழ் இன மக்களுக்கு எதிராக மாறவேண்டாம் என்றும் அவர் நலன் கருதியே நான் கோரிக்கை வைத்தேன்.

“தமிழக முதல்வருக்கும் உரிய பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் நன்றி” : இயக்குநர்  சீனு ராமசாமி

ஆனால் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன. எனக்கு கடந்த 4 நாட்களாக வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். எனக்கு கடந்த 4 நாட்களாக வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர் என்று கூறினார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

https://twitter.com/seenuramasamy/status/1322387184456925184

இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், என் மீது அன்பு கொண்ட தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கும் ஊடகம் & பத்திரிக்கை துறையினருக்கும் சர்வ கட்சி தலைவர்களுக்கும் உரிய நேரத்தில் பாதுகாப்பு அளித்த காவல் துறையினர்க்கும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கும் என் மீது அன்பு கொண்ட நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும்
நன்றி என்று பதிவிட்டுள்ளார்.