போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

 

போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவர் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரப்பி வந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் தகவல்கள் பரப்புவது The Epidemic Diseases Act and Regu- lations பிரிவு 8-ன்படி தடை செய்யப்பட்டுள்ளதால் அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி அவர் கடந்த 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியது மட்டுமில்லாமல், மக்களிடம் கொரோனா சிகிச்சை செய்வதாக பணம் பறித்ததாகவும் அவர் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்தன. இதனால் போலி சித்த மருத்துவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. முன்னதாக ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திருத்தணிகாசலம் மீண்டும் ஜாமீன் கோரி மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்நிலையில் அவரது மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் அவரது ஜாமீன் மனுவை நிராகரிக்க கோரி காவல்துறை கோரிக்கை விடுத்ததால், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.