சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் எ.வ.வேலுவை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கட்சியிலிருந்து நீக்கம்

சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் எ.வ.வேலுவை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கட்சியிலிருந்து நீக்கம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவை எதிர்த்து திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எஸ். தணிகைவேல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் எ.வ.வேலுவை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கட்சியிலிருந்து நீக்கம்

இதுகுறித்து பாஜக மாநில பொது செயலாளர் கரு. நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வணிக பிரிவின் மாநில துணை தலைவர் எஸ். தணிகைவேல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், தற்போது கட்சியில் எவ்வித செயல்பாடும் இல்லாத காரணத்தினால், மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலுடன் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தணிகைவேல் தேடப்பட்டுவரும் நிலையில் பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.