இன்று டெல்லி செல்லும் தங்கமணி, வேலுமணி! – ஓ.பி.எஸ் விவகாரம் காரணமா?

இன்று டெல்லி செல்லும் தங்கமணி, வேலுமணி! – ஓ.பி.எஸ் விவகாரம் காரணமா?

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்னை காரணமாக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று டெல்லி செல்ல உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அமைச்சர்கள் தங்கள் மனம் போன போக்கில் கருத்து சொல்லவே அது கட்சியின் கூட்டுத் தலைமைக்குள் மன வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது. கடந்த வாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அடுத்த முதல்வர், நிரந்தர முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இன்று டெல்லி செல்லும் தங்கமணி, வேலுமணி! – ஓ.பி.எஸ் விவகாரம் காரணமா?
இதைத் தொடர்ந்து சுதந்திர தினத்தன்று ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தலைவர்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் அ.தி.மு.க அமைச்சர்கள் ஈடுபட்டனர். ஒரு வழியாக சமாதானம் ஆனதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரச்னை முடியவில்லை, தள்ளிப்போடப்பட்டுள்ளது என்று கட்சிக்குள் பேச்சு எழுந்துள்ளது.

இன்று டெல்லி செல்லும் தங்கமணி, வேலுமணி! – ஓ.பி.எஸ் விவகாரம் காரணமா?
இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லி சென்று அ.தி.மு.க கட்சிக்குள் உள்ள மோதல்கள் குறித்து பா.ஜ.க

இன்று டெல்லி செல்லும் தங்கமணி, வேலுமணி! – ஓ.பி.எஸ் விவகாரம் காரணமா?

தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஜே.பி.நட்டா, மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க உள்ளனர். குடியரசுத் தலைவரையும் சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.