‘கொளுத்தும் வெயில்’.. போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி தொடக்கம்.. !

 

‘கொளுத்தும் வெயில்’.. போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி தொடக்கம்.. !

வெயிலிலேயே வாடும் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மோர் வழங்கப்பட்டு வருகிறது.

கோடைக்காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. அப்போது வெயிலிலேயே வாடும் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மார்ச்-ஜூன் வரையில் 4 மாதங்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த வருடமும் மோர் வழங்கும் நிகழ்ச்சியை ஜெமினி மேம்பாலம் அண்ணா ரோட்டரி சிக்னல் அருகே சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடக்கி வைத்தார். 

ttn

அந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல்துறைக்கு 5 சிறப்புப் போக்குவரத்து சுற்றுக்காவல் சுசுகி பைக்குகள் வழங்கப்பட்டது. ஜப்பான் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அந்த பைக்குகளில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ.2,50,000 என 5 பைக்குகளுக்கு மொத்தம் ரூ.12,50,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ttn

மேலும், சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு ஒவ்வொரு நாளும் 5,000 பாக்கெட் வழங்கப்பட்டு வரும் நிலையில், 4 மாதங்களுக்கு மோர் வழங்க ரூ.30,19,500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மோர் வழங்கும் நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையாளர் அருண் ஐபிஎஸ், போக்குவரத்து இணை ஆணையாளர் எழிலரசன் ஐபிஎஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.