நாய் போன்று மாறிய 15 வயது சிறுவன்... வெறிநாயால் உயிர் போன பரிதாபம்

 
dog dog

தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் கடியால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Death

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15) என்ற சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.  இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் இருந்த வெறி நாய் ஒன்று கடித்ததில் லேசான காயங்களுடன் சபரிவாசன் தப்பியுள்ளார். நாய் கடித்ததை பெற்றோரிடம் கூறினால் அடிப்பார்கள் என எண்ணி சபரிவாசன் நாய் கடித்ததை வீட்டில் சொல்லாமல் மறைத்துள்ளார்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிவாசனின் செயல் சற்று மாறுபட்டு காணப்பட்டு வருவதாக அவரது தந்தை பாஸ்கர் சிறுவனை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு ரேபிஸ் நோய் தலைக்கு ஏறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அங்கு சபரிவாசன் நாய் போன்ற செயலில் ஈடுபட்டதால் உடனடியாகமேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை சீராகாததால் உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த சபரிவாசன் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்று எண்ணி நாய் கடித்ததை பெற்றோர்களிடம் கூற மறுத்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.