ஸ்டாலின் வீழ்ச்சியை காணத்துடிக்கும் அழகிரி?!

 

ஸ்டாலின் வீழ்ச்சியை காணத்துடிக்கும் அழகிரி?!

கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதே அழகிரிக்கு பிடிக்கவில்லை! ஒரே தலைவர்தான் அது கலைஞர் மட்டும்தான் என்றெல்லாம் கூறி வந்தார். தற்போது திமுக பற்றி அவதூறு பரப்பி வருகிறார்.

திமுகவில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்ட அழகிரி, அக்கட்சியை வஞ்சம் தீர்க்க துடிக்கிறார். திமுகவின் வளர்ச்சியை கெடுக்கவும், எழுச்சியை குலைக்கவும் அழகிரி செயல்பட்டு வருவதாய் கூறி அவரை அக்கட்சியில் இருந்து நீக்கினர். கருணாநிதி மறைவுக்கு பின் கட்சியில் வந்து ஒட்டிக்கொள்ளலாம் என்று பார்த்தார், அதுவும் முடியவில்லை.

alagu

உண்மையான திமுக தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று கூட்டம் கூட்டிப் பார்த்தார். அப்போதும் திமுகவில் சேர வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி ஸ்டாலினை வீழ்த்த நினைக்கிறார்!

alu

கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதே அழகிரிக்கு பிடிக்கவில்லை! ஒரே தலைவர்தான் அது கலைஞர் மட்டும்தான் என்றெல்லாம் கூறி வந்தார். தற்போது திமுக பற்றி அவதூறு பரப்பி வருகிறார். மதுரையில் நடந்த திருமண விழா ஒன்றில் பேசிய அவர், திமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை என பேசினார்.

j

மேலும் அவர், திமுகவில் அந்தந்த மாவட்ட செயலாளர்களை வேறு எங்கோ இருப்பவர்கள் கட்டுப்படுத்துகின்றனர், அனைவரும் சம்பளத்திற்காக வேலை பார்த்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். தேர்தல் வேளையில் திமுக மீது இப்படியான குற்றச்சாட்டுகளை அடுக்குவதால், திமுகவினர் அழகிரி மீது கடுப்பில் இருக்கின்றனர்.

இதையும் வாசிக்க: கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 நாட்களுக்கு பிறகு ஒருவர் கைது; உண்மை நிலவரம் என்ன?