வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி காட்சிகளை 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் !

 

வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி காட்சிகளை 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் !

வாக்கு எண்ணிக்கையின் மொத்த காட்சிகளையும் சிசிடிசி காட்சிகளாக பதிவு செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கையின் மொத்த காட்சிகளையும் சிசிடிசி காட்சிகளாக பதிவு செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று  விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், குறுகிய காலம் இருப்பதால் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது கடினமான செயல் என்று மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

tttn

ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள் ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு நாட்கள் முழுமையாக உள்ளது. அதனால், ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் காட்சிகள் முழுவதுமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி, ஜனவரி 3 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர் . மேலும், வாக்கு எண்ணிக்கையை  நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று  அறிவுறித்தியுள்னர்.