மூளை சாவு அடைந்த மகனின் உடலுறுப்புகளை தானம் செய்த பெற்றோர்…விமானம் மூலம் சென்னை வந்த இதயம்!

 

மூளை சாவு அடைந்த மகனின் உடலுறுப்புகளை தானம் செய்த பெற்றோர்…விமானம் மூலம் சென்னை வந்த இதயம்!

சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து காமலாபுரம் விமான நிலையத்திற்கு ஆம்புலன்ஸின் மூலம் வந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்  விஜயகுமார். இவருக்கு ராணி என்ற மனைவியும், சுரேந்திரன் என்ற மகனும்  உள்ளனர். சுரேந்திரன் கடந்த  8ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். இதனால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுரேந்திரன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு சுரேந்திரன் பெற்றோர் கதறி அழுதனர். 

ttn

இருப்பினும் மகன் பிரிந்தாலும் அவன் இன்னும் பல ஆண்டுகள் இந்த உலகத்தில்  வாழவேண்டும் என்று நினைத்து சுரேந்திரன் உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி சுரேந்திரனின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட ஏழு உறுப்புகள் பல்வேறு இடங்களுக்கு தனமாக அளிக்கப்பட்டது. குறிப்பாக, இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி போலீசார் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து காமலாபுரம் விமான நிலையத்திற்கு ஆம்புலன்ஸின் மூலம் வந்தது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுப்புராஜ் மற்றும் உதவியாளர் நாகராஜ் ஆகியோர் 25 கிலோ மீட்டர் தூரத்தை 18 நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்தனர். இதற்கான போக்குவரத்து சீர் செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுரேந்திரனின் இதயம் வெற்றிகரமாகச் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. 

ttn

இதுகுறித்து கூறிய சுரேந்திரன் பெற்றோர், ‘எங்களுக்கு இதயப்பிரச்சனை உள்ளது. எங்களை போன்றவர்களுக்கு என் மகனின் இதயம் உதவ வேண்டும் என்பதற்காகத் தான் உடலுறுப்பு தானம் செய்தோம்’ என்று கண்ணீருடன் கூறியுள்ளனர்.