முறைகேடு காரணமாக குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுகிறதா?.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

 

முறைகேடு காரணமாக குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுகிறதா?.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

அரசு தேர்வுகளில் தொடர்ந்து நடந்து வரும் முறைகேடு காரணமாக குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ராமேஸ்வரம், கீழக்கரை  தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் அவர்கள் தேர்வு எழுத முடியாத படி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அவர்கள் மீது,  6 வழக்குகளின் கீழ்  சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை, விழுப்புரம், சிவகங்கை என அனைத்து மாவட்டங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 11 இடைதரகர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

ttn

அரசு தேர்வுகளில் தொடர்ந்து நடந்து வரும் முறைகேடு காரணமாக குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ” குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் நடக்க உள்ள அனைத்து தேர்வுகளும் எந்த ஓட்டையும் இல்லாமல் நடத்தப்படும். 16 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வைச் சிலர் செய்த தவறுகளுக்காக ரத்து செய்தால், இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைவார்கள். இந்த முறைகேட்டில் ஊழியர்கள் சிலர் குற்றம் செய்ததால் ஒட்டுமொத்த டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தையே குறை சொல்லக் கூடாது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று தெரிவித்தார்.