#BREAKING முட்டை சாப்பிட்டால் கேன்சர் வருமா?- அதிர்ச்சியை ஏற்படுத்திய இன்ஸ்டா மருத்துவர்

 
s s

எக்கோஸ் நியூட்ரிஷியன் முட்டைகளில், தடை செய்யப்பட்ட மற்றும் புற்றுநோயைத் தூண்டும் ஆன்ட்டிபயோடிக் இருப்பதாக யூடியூப் ஒன்றில் மருத்துவர் வெளியிட்ட தகவல் தற்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் முட்டைகள்’ என்ற தலைப்பில் யூ-ட்யூபில் வெளிவந்த ஒரு வீடியோ இணையவாசிகளை கலங்கடித்துள்ளது. அந்த வீடியோவின்படி, உயர்தர மற்றும் 100% ஆண்டிபயாடிக் இல்லாதது என்று விளம்பரப்படுத்தப்படும் எக்கோஸ் நியூட்ரிஷியன் (Ecko’s Nutrition) முட்டைகளில், தடை செய்யப்பட்ட மற்றும் புற்றுநோயைத் தூண்டும் பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சைக்கான தொடக்கமாக மரு.மன்னனோரா தனது பக்கத்தில் பரிசோதிக்கப்பட்ட முட்டை மாதிரிகளில் AOZ எனப்படும் நைட்ரோஃபுரான் என்ற தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக்கின் மாற்றுப் பக்கவிளைவு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் .

முட்டை குறித்தான ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் குறித்து அவர் வெளியிட்ட அந்த பதிவில்  இந்த வகை முட்டைகள்  பில்லியனுக்கு 0.73 மட்டுமே என்றாலும், தயாரிப்பு 100% ஆண்டிபயாடிக் இல்லாதது  விளம்பரப்படுத்தப்பட்டதை கருத்தில் கொண்டால் இது நுகர்வோரிடையே நம்பிக்கை சார்ந்த சந்தேகங்களை ஏற்படும். இந்த முட்டைகளிலுள்ள நைட்ரோஃபுரான் மற்றும் நைட்ரோஇமிடசோல் போன்ற மரபணு நச்சுத்தன்மை கொண்ட இரு வேதிப்பொருள்கள் டிஎன்ஏ-வை பாதிக்கக்கூடும் என்றும், அதனால் புற்றுநோய் அபாயம் உயரும் என்றும் கூறியுள்ளார் :

இவரது இந்த வீடியோவை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் முட்டைகள் உற்பத்தி மற்றும் அதன் திறனை கண்காணிக்க உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முட்டையின் தரத்தை கண்காணிப்பதை தீவிர படுத்தியுள்ளனர் .பேசு பொருளாக மாறிய இந்த சம்பவம் குறித்து மருத்துவ உலகினர் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதற்காக முட்டையை முற்றிலுமாக ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் தவறுக்கு ஒட்டு மொத்தமாக தவிர்க்க முடியாது.  வரும் நாட்களில் ஆன்ட்டிபயாட்டிக் ஊசிகள் செலுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உணவு பாதுகாப்புத் துறை தரப்பில் விதிக்கப்பட உள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.