மத சம்பிரதாயங்களில் நீதிமன்றமோ அரசோ தலையிட கூடாது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

 

மத சம்பிரதாயங்களில் நீதிமன்றமோ அரசோ தலையிட கூடாது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

மதம் சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களில் நீதிமன்றமோ அரசோ தலையிடுவது கூடாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்

சென்னை: மதம் சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களில் நீதிமன்றமோ அரசோ தலையிடுவது கூடாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மதம் சார்ந்த சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகளில் மத்திய, மாநில அரசுகளோ நீதிமன்றமோ தலையீடுவது கூடாது. மத தலைவர்கள், ஆச்சாரியர்கள் என்ன சொல்கிறார்களோ அதை தான் அரசு நிறைவேற்ற வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை மத விஷயத்தில் நிறைவேற்றினால் இந்தியா முழுவதும் மத ஒற்றுமை குறையும் அபாயம் உள்ளது என்றார்.

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதேபோல், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முத்தலாக் முறையை குற்றமாக கருதும் சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.