மக்களின் மீது கிருமிநாசினி ஸ்ப்ரே தெளிக்கும் பாதை அமைப்பு : அசத்தும் மாவட்ட நிர்வாகம்!

 

மக்களின் மீது கிருமிநாசினி ஸ்ப்ரே தெளிக்கும் பாதை அமைப்பு : அசத்தும் மாவட்ட நிர்வாகம்!

இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,500ஐ எட்டியுள்ள நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,500ஐ எட்டியுள்ள நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. கிருமிநாசினி மூலம் கொரோனா வைரஸை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டதில் இருந்து அனைத்து கிராமங்களிலும் தன்னார்வலர்கள் ஊர் முழுவதும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். குறிப்பாக வேப்பிலை,மஞ்சள் உள்ளிட்ட இயற்கையான பொருட்கள் மூலம் உருவான கிருமிநாசினியை தெளித்து வருகின்றனர். சில பகுதிகளில் செயற்கை மருந்துகளை கொண்டும் கிருமிநாசினி தாயரித்து தெளித்து வருகின்றனர். 

 
இந்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் மீது கிருமி நாசினி ஸ்ப்ரே தெளிக்கும் பாதையை, அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தியுள்ளனர். 16 அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட அந்த பாதையில், 1000 லிட்டர் கிருமி நாசினி மூலம் தொடர்ந்து 18 முதல் 20 மணி நேரம் தெளிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் அனைத்து மக்களுக்கும் 3 முதல் 5 வினாடிகளில் இந்த பாதையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.