போன் டவர்களை காலி செய்த மக்கள் கூட்டம்- ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நெட்வொர்க் சேவை பாதிப்பால் இணையதள பணிவர்த்தனை முடங்கியது.

சென்னை வண்டலூர் அருகே அமைந்துள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அவசர கதியில் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பேருந்து நிலையில் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நாளைய தினம் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து அதிகளவிலான பொதுமக்கள் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

அதேபோல் இங்கு அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் இணையதள சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது .இதனால் கடைகளில் பொருட்கள் மற்றும் உணவுகள் வாங்கிவிட்டு இணையதளம் மூலம் பணம் செலுத்த முடியாமல் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த ஐந்து ஏடிஎம்- இல் தற்பொழுது ஒரு சில ஏடிஎம் இயந்திரங்கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் பயணிகள் தங்கள் அவசர தேவைக்காக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்துச் செல்லும் அவல நிலை உருவாகி இருக்கின்றன.


