பிரதமர் நிகழ்ச்சியை ஒளிபரப்பாத தூர்தர்ஷன் ஊழியருக்கு தண்டனை ! உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் மைல்கல் !

 

பிரதமர் நிகழ்ச்சியை ஒளிபரப்பாத தூர்தர்ஷன் ஊழியருக்கு தண்டனை ! உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் மைல்கல் !

சென்னை வந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை நேரலை செய்யவில்லை என சென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குனர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை நேரலை செய்யவில்லை என சென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குனர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் கடந்த திங்கட்கிழமை சென்னை வந்தடைந்தார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் வரவேற்றனர். பின்னர் விமான நிலைய வளாத்தில் செய்யப்பட்டிருந்த மேடையில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அப்போது அமெரிக்காவில் தமிழ் மொழியின் தொன்மையை பற்றி பேசியதை குறிப்பிட்டார்.

modi

 

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று சென்னை ஐஐடி-யின் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.  பின்னர் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களும், பதக்கங்களும் கவுரவித்தார் பிரதமர் மோடி, விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் வந்தது முதல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு திரும்பியது வரை அனைத்து தனியார் செய்தி தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பு செய்தது. ஆனால் அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் மட்டும் நேரலை செய்யவில்லை. 

doordarshan

இதனால் அதிருப்தி அடைந் அரசு அதிகாரிகள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி உதவி இயக்குனர் வசுமதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜிங்பிங் சந்திப்பு நிகழ்ச்சியையாவது ஒளிபரப்பி சற்றேனும் மத்திய அரசின் கோவத்தை தணிக்க வேண்டிய சூழ்நிலை தூர்தர்ஷனுக்கு ஏற்பட்டுள்ளது.தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்தான் ஒளிபரப்பு செய்யமுடியவில்லை என தூர்தர்ஷன் ஊழியர்கள் சிலர் சொன்னது யாருக்கும் கேட்கவில்லை போலும்…