பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உருவெடுப்பார்: வைகோ நம்பிக்கை

 

பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உருவெடுப்பார்: வைகோ நம்பிக்கை

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவெடுப்பார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்: நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவெடுப்பார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் அனைத்து மக்களுக்கு சொந்தமானது. இன்று பிரதமராக இருக்கும் நரேந்திரமோடி நான் குஜராத்தில் ஒற்றுமை கூட்டத்தில் பேசியபோது எனது பேச்சை குஜராத்தியில் மொழி பெயர்த்தவர். கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மோடி பிரதமராக பதவியேற்றார். அப்போது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேக்கு அழைப்பு விடுத்ததால் மோடிக்கு எதிராக அன்று கருப்புகொடி காட்டினோம். இன்று அவரது ஆட்சி முடியும் சமயத்திலும் மதுரையில் கருப்புக்கொடி காட்ட உள்ளோம். 

பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றும். பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக முக ஸ்டாலின் உருவெடுப்பார். தமிழகத்தில் தேனி மாவட்டத்தை அழிக்க நியூட்ரினோ திட்டமும், டெல்டா மாவட்டத்தின் நீர்ஆதாரத்தை பாதிக்க ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விரைவில் இது முடிவுக்கு வரும் என்றார்.