பாஜகவுக்கு வெயிட்டிங்: அதிமுக – பாமக கூட்டணி ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது

 

பாஜகவுக்கு வெயிட்டிங்: அதிமுக – பாமக கூட்டணி ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது

மக்களவைத் தேர்தலில் பாமக உடனான கூட்டணியை உறுதி செய்த அதிமுக, பாஜக உடனான கூட்டணி பேச்சு வார்த்தைக்காக காத்திருக்கிறது.

சென்னை: மக்களவைத் தேர்தலில் பாமக உடனான கூட்டணியை உறுதி செய்த அதிமுக, பாஜக உடனான கூட்டணி பேச்சு வார்த்தைக்காக காத்திருக்கிறது.

இன்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வருகிறார் என தகவல்கள் வெளியானது. சென்னை வரும் அவர், மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக அமைச்சர்களிடம் பேசி உறுதி செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அமித் ஷா வருவது ரத்து செய்யப்பட்டது, கூட்டணி குறித்து பேச பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் வரவுள்ளார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி குறித்து உறுதி செய்துள்ளனர்.

jj

அடையாறு க்ரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற கூட்டணி பேச்சு வார்த்தை முடிவடைந்தது. கூட்டணி ஒப்பந்தத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர். பியூஷ் கோயல் வருகைக்காக காத்திருக்கின்றனர்.