பாஜகவின் கைக்குப் போன டாஸ்மாக்!
Oct 10, 2019, 18:49 IST1570713594000
தமிழக டாஸ்மாக் கடைகளின் பார் உரிமை அதிமுக ஆதரவுடன் பாஜக பிரமுகர்களின் கைக்கு சென்றுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் தற்போது வழங்கப்பட்டு வருவது தெரிந்ததுமே அ.தி.மு.க. மேலிடத்தை அணுகியுள்ளது பாஜக. இதற்காகவே காத்துக்கொண்டிருந்ததுபோல் அதிமுகவும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளின் பார் உரிமத்தை பாஜகவினருக்கு ஒதுக்குவதாக தெரிவித்துள்ளதாம்.
இதையடுத்து சென்னையை ஒட்டிய புறநகர் பகுதி முழுவதும் பாஜகவசம் வந்துவிட்டது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த நிலை தொடரும் எனக்கூறப்படுகிறது.