நொய்யல் நதியை அசுத்தம் செய்வதற்கு எதிர்ப்பு – கல்லூரி முன்பு குப்பைகளை கொட்டிய மாணவர்கள்

 

நொய்யல் நதியை அசுத்தம் செய்வதற்கு எதிர்ப்பு – கல்லூரி முன்பு குப்பைகளை கொட்டிய மாணவர்கள்

நொய்யல் ஆற்றை அசுத்தப்படுத்துவதைக் கண்டித்து காருண்யா பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பு குப்பைகளை கொட்டி இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை :

நொய்யல் ஆற்றை அசுத்தப்படுத்துவதைக் கண்டித்து காருண்யா பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பு குப்பைகளை கொட்டி இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காருண்யா பல்கலைக்கழகம் 

கோவை மாவட்டத்தில் இருக்கும் காருண்யா பல்கலைக்கழகம் அப்பகுதி மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்தப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களுக்காக, பல்கலைக்கழகத்தின் அருகிலே  ஓட்டல்கள், பேக்கரிகள், பெட்டிக் கடைகள் என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், அருகே உள்ள நொய்யல் ஆற்றில் கொட்டப்படுகின்றன.

காருண்யா

இதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, காருண்யா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனிடையே, கல்லூரிக்கு சொந்தமான இடத்தில கடைகளின் குப்பைகளை கொட்டுவதற்கு காருண்யா பல்கலைக்கழகம் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், குப்பைகள் மீண்டும் நொய்யல் ஆற்றில் கொட்டும்படியான  நிலை ஏற்பட்டுள்ளது.

காருண்யா

இளைஞர்கள் கண்டனம் 

இந்த நிலையில், காருண்யா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து சேவை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், சுமார் ஒரு டன் எடையுள்ள குப்பைகளை பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலின் முன்பு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி மாணவர்களுக்காக மட்டுமே இங்கு செயல்பட்டு வரும் கடைகளின் குப்பைகளை, காருண்யா பல்கலைக்கழகமே கையாள வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.