நெல்லை முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலை : சிபிசிஐடி ஐஜி ஆய்வு!

 

நெல்லை முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலை : சிபிசிஐடி ஐஜி ஆய்வு!

மூவரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

நெல்லை முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலை : சிபிசிஐடி ஐஜி ஆய்வு!

நெல்லை: நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை குறித்து சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

uma

நெல்லை ரெட்டியார் பட்டியில்  திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் கடை ஜூலை 23ஆம் தேதி மர்ம நபர்களால் வீட்டில் கொலை செய்யப்பட்டுக்  கிடந்தனர்.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூவரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் கொலைக்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இக்கொலை தொடர்பாக திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச் செயலாளர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை கைது செய்தனர். அடுத்த நாள்  நடுவர் நீதிமன்ற நீதிபதி நிஷாந்தினி முன்பு  கார்த்திகேயன்  ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 14 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

uma

இந்நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு கடந்த ஜுலை மாதம் 29-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திகேயனை 7நாள் காவலில் வைத்து  சிபிசிஐடி  போலீசார் விசாரித்த நிலையில் , நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிபதி வரும் 12-ஆம் தேதி வரை சிபிசிஐடி விசாரணைக்கு எடுக்க நீதிபதி  உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து 3 பேர் கொலை குறித்து சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.