நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும்!  உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? – ப. சிதம்பரம்

 

நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும்!  உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? – ப. சிதம்பரம்

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மூன்றாம் கட்டமாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மார்ச். 24 ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு இன்னும் 7 நாட்களில் நிறைவடையவுள்ளது. ஊரடங்காள் ஏராளமான மக்கள் வருவாயின்றி உணவுக்கு வழியின்றி தவித்துவருகின்றனர். மே. 4 ஆம் தேதிவரை மத்திய அரசு ஊரடங்கிலிருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாநில முதல்வர்களுடன் மற்றொரு வீடியோ மாநாட்டை நடத்தவுள்ளார். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஐந்தாவது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இக்கூட்டம் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மே 17 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தொற்று பரவுகிறது, 3 சதவிகிதம் மரணமடைகிறார்கள், பொருளாதாரம் 100 சதவிகிதம் குலைந்து விட்டது, ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் சிறு, குறு தொழில்களும் சிதைந்து விட்டன. இச்ச்சூழ்நிலையில் உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும், காங்கிரஸ் கட்சி சொன்ன யோசனைகளை நாடும் அரசும் ஏற்றுக்கொள்ளும் விடியல் ஏற்படும். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.