திரைப்படம் பார்க்கும் வசதி அறிமுகம்.. அசத்தும் சென்னை மெட்ரோ !

 

திரைப்படம் பார்க்கும் வசதி அறிமுகம்.. அசத்தும் சென்னை மெட்ரோ !

சென்னையில் மெட்ரோ ரயில் அமல்படுத்தியதில் இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் அமல்படுத்தியதில் இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்து வருகின்றனர். அதன் கட்டணம் மட்டுமே மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது சலுகைகள் கொடுத்து மெட்ரோ நிர்வாகம் அசத்தி வருகிறது. ஆரம்பத்திலிருந்த பயணிகளின் எண்ணிக்கையை விட இப்போது அதிகமாகவே உள்ளது.

ttn

இந்நிலையில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காகத் திரைப்படம் ரயிலில் திரைப்படம்  உள்ளிட்ட கேளிக்கையைப் பார்க்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இதற்காக மெட்ரோ நிர்வாகம் செயலி ஒன்றை உருவாகியுள்ளது. அதன் பெயர்   சுகர்பாக்ஸ் (SugarBox). இந்த செயலியை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள WIFI வசதியைக் கொண்டு உபயோகப்படுத்தி திரைப்படம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம் என்றும் அதில் தமிழ், ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் காணொளிகள் பதிவிடப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ttn

இதுமட்டுமில்லாமல், அந்த செயலியில் பதிவிறக்கம் செய்யவும் முடியும் என்றும் இந்த செயலியை  ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்ற அனைத்து செல்போன்களிலும் உபயோகப் படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த திட்டம் சென்னை சென்ட்ரல் முதல் விமானம் நிலையம் வரையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில் விரைவில் எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.