தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை முடிவடையும் !

 

தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை முடிவடையும் !

தமிழகத்தில் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. அப்போதில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது.

தமிழகத்தில் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. அப்போதில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த மாதம் பருவமழை வலுப்பெற்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. 

ttn

இந்நிலையில், இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி அதாவது, இன்னும் மூன்று நாட்களில் வடகிழக்கு பருவ மழைக் காலம் முடிவடையும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, கடற்காற்று ஜனவரி வரை தொடர்ந்தாலும், டிசம்பர்-31 ஆம் தேதி வரை மட்டுமே பருவமழையாகக் கணக்கிடப்படும் என்றும் ஜனவரி மாதத்தில் மழை பெய்தால் அது குளிர்கால மழையாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். 

ttn

மேலும், தமிழகத்தின் வட மாவட்டங்களை விடத் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை அதிகமாகப் பெய்துள்ளது என்றும் சென்னையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை 17% சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என்றும் தெரிவித்தார்.