தஞ்சை பெரிய கோவிலை சுற்றும் பயங்கர வதந்திகள்..!?

 

தஞ்சை பெரிய கோவிலை சுற்றும் பயங்கர வதந்திகள்..!?

தஞ்சை பெரியகோவில் பற்றி நூற்றுக்கணக்கான மர்ம கதைகளும், புதிர்களும், மூட நம்பிக்கைகளும் உண்டு.கடைசி 500 ஆண்டுகாலம் தஞ்சையை ஆண்டது தமிழர்கள் இல்லை,மராத்தியர்,தெலுங்கர் ஆண்டதால் இந்தக் கோவிலின் வரலாறு பற்றி வதந்திகளே வளர்க்கப்பட்டன. 

தஞ்சை பெரியகோவில் பற்றி நூற்றுக்கணக்கான மர்ம கதைகளும், புதிர்களும், மூட நம்பிக்கைகளும் உண்டு.கடைசி 500 ஆண்டுகாலம் தஞ்சையை ஆண்டது தமிழர்கள் இல்லை,மராத்தியர்,தெலுங்கர் ஆண்டதால் இந்தக் கோவிலின் வரலாறு பற்றி வதந்திகளே வளர்க்கப்பட்டன. 

rajasolan

ஜி.யூ. போப் கூட இந்தக் கோவிலைக் கட்டியவன் காடுவெட்டிச் சோழன் என்றுதான் சொல்லி இருக்கிறார்.1887-ல் ஸூல்ட்ஸ் என்கிற ஜெர்மானியர்  தொல்லியல் ஆய்வு செய்து கண்டுபிடித்துச் சொன்ன பிறகுதான் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன் ராஜசோழன் என்பதே தமிழர்களுக்குத் தெரியும். 

raja

இந்த கோவில் பூதங்களால் கட்டப்பட்டது என்றெல்லாம் கர்னபரம்பரைக் கதைகள் இருக்கின்றன.985-ல் சோழப் பேரரசனாக முடி சூட்டிக்கொண்ட ராஜராஜன் இந்தப் பெரிய கோவிலைக் கட்டி 1010-ம் வருடம் குடமுழுக்குச் செய்தான் ராஜராஜ சோழன் .அவன் காலத்தில் இந்தக் கோவிலில் ஆண்டுக்கு 36 விழாக்கள் கொண்டாடப்பட்டு இருக்கின்றன. அந்த விழாக்களின் போது மக்களை அரசனே விழாவிற்கு அழைக்கிறான் என்கிற பொருளில் சிவபாத சேகரன் என்றும் ஸ்ரீராஜராஜ சோழன் என்றும் அவன் பெயர் பொறித்த எக்காளங்கள் முதலில் ஊதப்படும்.அதைத்தொடர்ந்து முரசங்களும் தாரை தப்பட்டைகளும் முழங்க விழாக்கள் துவங்கும்.

tanja

இந்த சிறப்புகள் அதிக காலம் நீடிக்கவில்லை. 1010-ல் குடமுழுக்கை முடித்தபிறகு இரண்டாண்டுகள் கழித்து 1012-ல் தன் மகன் ராஜேந்திரனுக்கு இளவரசு பட்டம் கட்டிய ராஜராஜன் 1014-ம் ஆண்டு,அதாவது கோவில் குடமுழுக்கு நடந்த 
நான்கு ஆண்டுகள் கழித்து இறந்து போனான்.அந்த மரணம் குறித்துக்கூட தெளிவான வரலாற்று ஆய்வுகள் இல்லை.

இப்படிக் கோடிகள் செலவழித்து குடமுழுக்கு செயவதை விட இந்தக் கோவில் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தி உண்மைகள வெளிப்படுத்துவதே தமிழ் தொண்டாகவும்,இறைத்தொண்டாகவும் இருக்க முடியும்.