சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

 

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது சட்ட அமைச்சர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஐஏஎஸ் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். 

சென்னை: ஜெயலலிதா மரண விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது சட்ட அமைச்சர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஐஏஎஸ் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது. அந்த ஆணையம் முன்பு ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர் பூங்குன்றன், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஆக்ரோஷமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

இந்நிலையில், அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம், இதுபோன்ற கருத்துக்களை அமைச்சர்கள் வெளியில் தெரிவிப்பதைத் தடுக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், அமைச்சர்கள் பொதுவெளியில் வைக்கும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தங்களை விரக்தியடைய செய்வதுடன், மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானம் தற்போது தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.