கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகம், கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம்! தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் 

 

கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகம், கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம்! தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் 

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவிவருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவிவருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இந்த முடக்கத்தால் பல தொழில்துறைகள் முற்றிலுமாக நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளன.சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இடம் வழங்க நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகள், அரசியல் கட்சிகள் என பலரும் முன்வந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தேமுதிக தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (ஏப்ரல் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸிற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக தலைமை கழகத்தையும் தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

statement

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருட்களான உணவு, காய்கறி, உடை, மருந்து, முகக்கவசம் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.