கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்; திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டாரா எடப்பாடி பழனிச்சாமி?-வீடியோ!

 

கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்; திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டாரா எடப்பாடி பழனிச்சாமி?-வீடியோ!

கொடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக சயான் மற்றும் மனோஜிடம் முதல்வர் பழனிசாமி பெயரை இழுத்து விடக் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: கொடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக சயான் மற்றும் மனோஜிடம் முதல்வர் பழனிசாமி பெயரை இழுத்து விடக் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kodanadu

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் வாக்குமூலம் அளித்திருந்தார்.

sayan, manoj

இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரை தமிழக காவல்துறையினர் தில்லியில் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். காவல்துறையினர் விசாரணைக்குப் பிறகு, எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் ஆஜராகததால் அவர்களது ஜாமீனை ரத்து செய்து, அவர்கள் இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் இருவரையும் கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

sayan, manoj

இருப்பினும், சயான் மற்றும் மனோஜை கேரளாவில் நீலகிரி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், சயான் மற்றும் மனோஜை பிரதீப் என்பவர் சந்தித்து எடப்பாடி பெயரை இழுத்துவிட்டால் தான் நீங்கள் தப்பிக்க முடியும். நாங்கள் சொல்கிறபடி சொன்னால் டெல்லியில் இருக்கும் பத்திரிகையாளர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என சொல்லிக் கொடுப்பது போன்ற காட்சிகள் உள்ளது.

இதையும் வாசிங்க

கோவையில் போட்டியிட போகும் கமல்? ஆனால் தொண்டர்கள் எதிர்பார்ப்போ வேறு: பின்வாங்குவாரா நம்மவர்!?