கிடுகிடு விலை உயர்வு ! கேஸ் சிலிண்டருக்கு பதிலாக விறகை பற்றவைக்கும் மக்கள் !

கிடுகிடு விலை உயர்வு ! கேஸ் சிலிண்டருக்கு பதிலாக விறகை பற்றவைக்கும் மக்கள் !

அபரீத தொழில் வளர்ச்சிக் காரணமாக விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இன்று சிறிய சிறிய கிராமங்களில் கூட எரிவாயு அடுப்பு பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தி தந்துள்ளது அரசு. ஆனால் எரிவாயு அடுப்பின் விலை மானியம், மானியமில்லா சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டே வருவதால் அதை கூடுதல் செலவாக மக்கள் கருதுகின்றனர். அதாவது இன்றைய தேதிப்படி மானியம் இல்லாத கேஸ் சிலிண்டரின் விலை 734 ரூபாயாக இருக்கிறது.

எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் விறகு அடுப்புகளை பொதுமக்கள் நாடும் நிலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஏற்பட்டுள்ளது.

cooking-with-firewood

அபரீத தொழில் வளர்ச்சிக் காரணமாக விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இன்று சிறிய சிறிய கிராமங்களில் கூட எரிவாயு அடுப்பு பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தி தந்துள்ளது அரசு. ஆனால் எரிவாயு அடுப்பின் விலை மானியம், மானியமில்லா சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டே வருவதால் அதை கூடுதல் செலவாக மக்கள் கருதுகின்றனர். அதாவது இன்றைய தேதிப்படி மானியம் இல்லாத கேஸ் சிலிண்டரின் விலை 734 ரூபாயாக இருக்கிறது.

gas-cylinder

இதனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் வசிக்கும் பெண்கள் தற்போது விறகு அடுப்புக்கு மாறி உள்ளனர். இங்கு விவசாயம், மீன்பிடி தொழில், உப்பள அளதொழில் மட்டுமே உள்ளது. தொழிற்சாலைகள் இல்லை. 
போதிய மழையின்றி, வருமானம் இல்லாததால் தற்போது பெரும்பாலான மக்கள் எரிவாயு சிலிண்டர்களை கைவிட்டு, காடுகளில் கிடக்கும் விறகுகளை எடுத்து வந்து அடுப்பு எரிக்கிறார்கள். எனவே ஏழை மக்களின் நலன் கருதி எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொதுவாக கிராமப்புறங்களில் முன்பெல்லாம் விறகு அடுப்புகள் அதிகம். இந்த அடுப்பில் தழைகள், வறட்டிகள் உள்ளிட்டவையும் பயன்படுத்துவர். மாட்டுச் சாணத்தில் இருந்து வரட்டி கிடைப்பதாலும், நெல் பயிரிடுவதன் மூலம் வைக்கோல் கிடைப்பதாலும் அடுப்புக்கென தனியாக செலவுகள் ஆவது கிடையாது. ஆனால் எரிவாயு சிலிண்டரை போறுத்தவரை கிட்டதட்ட மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை செரவிட வேண்டி இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.