காலையில் கல்லூரி… மாலையில் திருட்டு! புறநகர் ரயிலை கலக்கிய கல்லூரி மாணவி கைது

 

வசதியான வாழ்க்கைக்காக புறநகர் ரயில் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் – கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் ரயிலில் திருட்டு சம்பவம் அடிக்கடி நடப்பதாக ரயில்வே போலீசாருக்கு புகார் வந்துகொண்டே இருந்தது. இதன் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பெண் ஒருவரை பிடித்தனர்.

வசதியான வாழ்க்கைக்காக புறநகர் ரயில் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

theft

சென்னை தாம்பரம் – கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் ரயிலில் திருட்டு சம்பவம் அடிக்கடி நடப்பதாக ரயில்வே போலீசாருக்கு புகார் வந்துகொண்டே இருந்தது. இதன் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பெண் ஒருவரை பிடித்தனர். அவரிடமிருந்து 70 சவரன் தங்க நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால், திருட்டு சம்பவம் இனி நடக்காது என்று போலீசார் நினைத்தனர். ஆனாலும். தினமும் திருட்டு தொடர்பான புகார் போலீசாருக்கு வந்துகொண்டே இருந்தது. 

women

புகார் கூறுபவர்கள் பெரும்பாலானவர்கள் பெண்களாகவே இருந்தனர். இதனால், பெண்கள் பெட்டியில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக்கப்பட்டது. பெரும்பாலும் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள மாலை நேரத்திலேயே திருட்டு நடந்துள்ளது. அப்படி கண்காணிக்கும்போது ஒரு பெண் மட்டும் அடிக்கடி ரயிலில் வந்து செல்வது தெரியவந்துள்ளது. அவரது நடவடிக்கையை ரகசியமாக போலீசார் கண்காணிக்க ஆரம்பித்தனர். 

gold

தாம்பரத்தில் ரயிலில் ஏறி அமர்ந்துகொள்ளும் அந்த பெண், கூட்டமாக இருக்கும் நேரத்தில் உதவி செய்வது போல, உங்கள் பையைக் கொடுங்கள் நான் வைத்துக்கொள்கிறேன் என்று வாங்கி வைத்துக்கொள்கிறார். அப்படி வாங்கியபிறகு, பையிலிருந்து பர்ஸ், மொபைல் உள்ளிட்ட வற்றைத் திருடும்போது பெண் போலீசாரிடம் மாட்டிக்கொண்டார். 

mohanapriya

அவரை பிடித்து ரயில்வே காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. மிகவும் டிப் டாப்பாக, டீசண்டாக இருந்த அந்த பெண், சொசுகு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்டேன் என்று கூறியுள்ளார். “என்னுடைய பெயர் மோகனப்பிரியா, தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் படித்து வருகிறேன். காலையில் அங்கு சென்றுவிடுவேன். மதியத்துக்கு மேல் ஃப்ரீதான். மாலையில் ரயிலில் பயணம் செய்து திருட்டில் ஈடுபட்டு வந்தேன். இனி அப்படி செய்யமாட்டேன்” என்று கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
அவரிடமிருந்து நான்கு கிராம் தங்கம், பணம் மற்றும் சில செல்போன்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டு வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்துள்ளனர்.