காமராஜர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

என்ன திட்டம் கொண்டு வருவதானாலும், அதனால் என் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்டு, அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்திய தலைவர் காமராஜர்.
இன்று தமிழ், தமிழ் என்று வாய் கிழிய பேசுகிற அரசியல்வாதிகளுக்கு மத்தியில், உண்மையிலேயே மக்களுக்காக வாழ்ந்த தலைவர் காமராஜர். அவர் அப்படி வாழ்ந்ததினால் தான் ஐம்பது வருடங்கள் கழித்தும், மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக எல்லா கட்சியினரும், ‘காமராஜர் ஆட்சியைக் கொடுப்போம்’ என்று சொல்லி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

என்ன திட்டம் கொண்டு வருவதானாலும், அதனால் என் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்டு, அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்திய தலைவர் காமராஜர். தன் ஒரே மகனுக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று காமராஜரின் தாயார் ஆசைப்பட்டார். அப்போதைய பல தலைவர்களும் கூட பலமுறை காமராஜரை திருமணம் செய்துக் கொள்ளும் படி வற்புறுத்தி வந்தார்கள். யாரிடமும் காரணம் சொல்லாமலே தன் திருமண விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்தார் பெருந்தலைவர்.

அன்று பலரது மனத்திலும், வயசாகி கொண்டே போகிறதே… ஏன் காமராசர் இன்னும் திருமணம் செய்யவில்லை? என்கிற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. பொதுக்கூட்டங்களிலும் கூட, காமராஜர் பேசும் போது, அவர் மீதுள்ள அதீத அன்பால், மக்கள் அவரிடமே, ‘ஒரு கல்யாணம் பண்ணிக்கலாமில்லையா ஐயா?’ என்று கேட்டிருக்கிறார். ‘இப்ப அதுக்கு என்ன அவசரம்ணேன்’ என்று அப்போதைக்கு அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்தார். பின் இந்தக் கேள்வியை அவரிடத்தில் கேட்க யாருக்கும் துணிவு வரவில்லை. ஒரு கட்டத்தில், எல்லோருமே அமைதியாகி விட்டனர்.
ஒரு முறை, இங்கிலாந்து ராணி காமராஜரிடம் நேரடியாக, ‘ஏன் நீங்கள் இதுவரையில் திருமணமே செய்துக் கொள்ளவில்லை’ என்று கேட்டார். அந்த கேள்வி இங்கிலாந்து ராணியிடம் இருந்து வந்த அடுத்த வினாடியே, கொஞ்சமும் யோசிக்காமல் காமராஜர் சொன்ன பதில் இங்கிலாந்து ராணியை மெய்சிலிர்க்க வைத்தது.

காமராஜர் சொன்ன பதில் இது தான்…
‘நான் முதல்வர் ஆகி விட்டேன். ஆனால், இன்றும் என் ஆட்சியில் பல பெண்கள் திருமண வயதைத் தாண்டியும் அவர்களுடைய வறுமையின் காரணமாக திருமணமாகாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் திருமணம் செய்துக் கொள்ளாமல் வறுமையில் இருக்கும் போது, நான் மட்டும் எப்படி திருமணம் செய்துக் கொள்ள முடியும். எங்கள் சமூகத்தில் எப்போதுமே வீட்டில் தங்கைக்கு தான் முதலில் திருமணம் முடிக்கும் வழக்கம் உள்ளது. என் தங்கைகளுக்கெல்லாம் திருமணம் செய்யாமல் இருக்கும் போது, நான் எப்படி அதை மீறி திருமணம் செய்து கொள்வது?’ என்றார். நாட்டையே தன் வீடாக நினைக்கும் எண்ணம் இனி எந்த அரசியல்வாதிக்கு வருமோ?


