கல்லூரி மாணவி படுகொலை!! சென்னையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!!

 

கல்லூரி மாணவி படுகொலை!! சென்னையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!!

விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டதற்கு சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டதற்கு சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

thirumavalavan

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு திலகவதி எனும் 19 வயதுடைய ஒரு மகள் உள்ளார். அவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த மே மாதம் 8ம் தேதி தேதி கல்லூரி சென்று வந்து மாலை வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில், அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் மற்றும் சில வாலிபர்கள் வீடுபுகுந்து இவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றனர். வலியால் கத்திக் கூச்சலிட்ட திலகவதியின் அலறலை கேட்டு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

college girl

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் இன்று  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது பேசிய திருமாவளவன் கூறியதாவது, வீட்டில் தனியாக இருந்த மாணவி மீது சரமாரி தாக்குதல் நடத்திய வாலிபர்களே விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையினர் மீது அவ்வப்போது நடக்கும் தாக்குதல்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டாது. வழக்கு சிபிஐ க்கு விரைவில் மாற்ற வேண்டும். அதேபோல மாணவியின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.