ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வாங்க ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது? : உயர்நீதி மன்றம் கேள்வி

 

ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வாங்க ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது? : உயர்நீதி மன்றம் கேள்வி

ஒரு தனி நபர் 2 ஆவதாக வாங்கும் வீட்டிற்கு பத்திரப் பதிவு செலவை ஏன் இரண்டு மடங்காக உயர்த்தக் கூடாது என்றும் குடிநீர் வரி, மின்சார வரி ஆகியவற்றை ஏன் இரண்டு மடங்காக வசூலிக்கக் கூடாது?

தனி நபர் வீடு வாங்குவது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், தனி நபர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வாங்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது?.. ஒரு தனி நபர் 2 ஆவதாக வாங்கும் வீட்டிற்கு பத்திரப் பதிவு செலவை ஏன் இரண்டு மடங்காக உயர்த்தக் கூடாது என்றும் குடிநீர் வரி, மின்சார வரி ஆகியவற்றை ஏன் இரண்டு மடங்காக வசூலிக்கக் கூடாது? என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். 

\

ttn

அதனைத்தொடர்ந்து, மத்திய அரசின் அனைவருக்கும் வீடு என்ற திட்டம் எப்போது முழுமையாக நிறைவேறும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வீடு வாங்க கட்டுப்பாடு விதிப்பது குறித்தும்,  நம் நாட்டில் உள்ள எத்தனை பேருக்கு ஒன்றுக்கும் அதிகமான வீடுகள் இருக்கிறது என்பது குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மார்ச் 6 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.