ஊரடங்கு நீடித்தாலும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது!

 

ஊரடங்கு நீடித்தாலும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது!

உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வந்தால்தான் மருந்து கடைகளில் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளனர். 

உலக நாடுகளை பயமுறுத்தி வரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 ஆம் தேதி பிரதமர் மோடி நாளை வரை (ஏப்ரல் 14) ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இருப்பினும்  அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகள், மருந்தகங்கள் போன்றவை செயல்பட்டு வருகிறது. ஆனாலும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

ஊரடங்கு நீடித்தாலும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது!

இதுகுறித்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் செல்வன் கூறும் போது, “தமிழக மருந்து கடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பு இருக்கிறது. சின்ன  கடைகளில் தான் இந்த பிரச்னை இருக்கும்.  சென்னை. கோவை, மதுரை என பெரிய மருந்து குடோன்கள் உள்ளன. இதில் 35 ஆயிரம் மருந்து கடைகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளன.

ttn

 ஒரு சில கடைகள் மருந்துகளை எடுத்துவந்து விற்பனை செய்ய முடியாததால், தட்டுப்பாடு என்ற தோற்றம் உருவாகிறது. ஆனாலும்  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் வருகிற 30-ந்தேதி வரை மருந்து தட்டுப்பாடு இருக்காது.  

ttn

இருப்பினும்  ‘டெட்டால்’ பாட்டில் இருப்பு தமிழகத்தில் எங்குமில்லை. உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வந்தால்தான் மருந்து கடைகளில் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.