உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கலாசார சீர்கேடு ஏதுமில்லை: கமல்ஹாசன்

 

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கலாசார சீர்கேடு ஏதுமில்லை: கமல்ஹாசன்

திருமணம் தாண்டிய உறவு மற்றும் சபரிமலை கோயிலில் பெண்கள் அனுமதி உள்ளிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்

சென்னை: திருமணம் தாண்டிய உறவு மற்றும் சபரிமலை கோயிலில் பெண்கள் அனுமதி உள்ளிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

திருமணமானவர்கள் வேறு ஒருவருடன் பாலியல் உறவு வைத்து கொள்வது குற்றமில்லை என கூறி சட்டப்பிரிவு 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. அதேபோல், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. 

பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் எனவும், மதத்தில் ஆணாதிக்கக தன்மையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், திருமணம் தாண்டிய உறவு மற்றும் சபரிமலை கோயிலில் பெண்கள் அனுமதி உள்ளிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

திருமணம் தாண்டிய உறவு தவறில்லை என்ற தீர்ப்பு ஏற்கக்கூடியது என தெரிவித்துள்ள கமல்ஹாசன், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கலாசார சீர்கேடு ஏதுமில்லை  எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.