ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர வாய்ப்பு! ஏன் தெரியுமா?

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர வாய்ப்பு! ஏன் தெரியுமா?

ஆம்னி பேருந்துகளில் இனி ஒரு இருக்கைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரி வசூலிக்கப்படவுள்ளது. மேலும் படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2,500 என புதிதாக வரி விதிக்கும் மசோதாவை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்  பேரவையில் தாக்கல் செய்துள்ளார். 

இந்த மசோதா அமலுக்கு வந்தால், படுக்கை வசதி உடைய ஆம்னி பேருந்துகளில் உள்ள இருக்கைக்கு மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாயும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு மாதம் 2500 ரூபாயும் வரி விதிக்கப்படும்.  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இந்த வரியை செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து பேருந்துகளை இயக்க முடியும் என மசோதாவில் உள்ளது. இந்த வரியை எவ்வாறு செலுத்த வேண்டும் என்ற நடைமுறைகளும் மசோதாவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.