அவசர மருத்துவ உதவி எண் 108 பாதிப்பு; மாற்று எண் அறிவிப்பு

 

அவசர மருத்துவ உதவி எண் 108 பாதிப்பு; மாற்று எண் அறிவிப்பு

தொழிநுட்ப கோளாறு காரணமாக அவசர மருத்துவ உதவி எண் 108 சேவை பாதிப்படைந்துள்ளது

சென்னை: தொழிநுட்ப கோளாறு காரணமாக அவசர மருத்துவ உதவி எண் 108 சேவை பாதிப்படைந்துள்ளது.

தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் விதமாக 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் தற்போது மொத்தம் 951 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்தின கீழ் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு, மருத்துவ உதவியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் பணியாற்றி வருகின்றனர்.

108 அவசரகாலச் சேவையை இன்னும் சிறப்பாகவும் விரைவாகவும் மக்களுக்கு கிடைத்திட, தொழிநுட்ப ரீதியாகவும், கூடுதல் ஊர்திகள் மூலமாகவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இச்சேவை கடந்த ஒரு மணி நேரமாக பாதிப்படைந்துள்ளது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக அவசர மருத்துவ சேவையான 108 இயங்கவில்லை என தெரிவித்துள்ள அந்நிர்வாகம், அதற்கான மாற்று என்னையும் அறிவித்துள்ளது. அதன்படி, அவசரகால மருத்துவ உதவிக்கு 108 என்ற எண்ணிற்கு பதிலாக 044-40170100 என்ற எண்ணை தற்காலிகமாக அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.