அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இதை மறக்காம செய்து பாருங்க!

 

அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இதை மறக்காம செய்து பாருங்க!

இன்று கார்த்திகை மாத அமாவாசை திதி. பொதுவாக மறைந்த முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவைகளை அமாவாசை தினங்களில் கொடுப்பார்கள். அப்படி முறையாக அமாவாசை தினங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வந்தால், பித்ருக்களின் பசியும், தாகமும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை

இன்று கார்த்திகை மாத அமாவாசை திதி. பொதுவாக மறைந்த முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவைகளை அமாவாசை தினங்களில் கொடுப்பார்கள். அப்படி முறையாக அமாவாசை தினங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வந்தால், பித்ருக்களின் பசியும், தாகமும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

ammavasi

அமாவாசை தினங்களில் முன்னோர்கள் நம் இருப்பிடத்திற்கு வந்து, நாம் தரும் எள் கலந்த நீரை ஏற்றுக் கொண்டு அவர்களின் பசியையும், தாகத்தையும் தணித்துக் கொள்கிறார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன

karthigai


  இன்றைய இயந்திரத்தனமாகி விட்ட வாழ்க்கைச் சூழலில், பலரும் முறையாக அமாவாசை தினங்களில் முறையாக தர்ப்பணம் செய்வதில்லை. அப்படி சமய, சந்தர்ப்பங்களின் காரணமாக அமாவாசை திதிகளில் தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள், அமாவாசை தினத்தில் அவர்கள் இருக்கும் இடத்திலேயே மறைந்த அவர்களின் முன்னோர்களை மானசீகமாக மனதுள் நினைத்துக் கொண்டு, கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த உணவை காகங்களுக்கு வைப்பதால் அவர்களுக்கு, அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்த பலன்கள் முழுதும் கிடைக்கும் என்கிறது சாஸ்திரங்கள்.