அதிமுக – பாஜக கூட்டணி உறுதி: எஸ்.வி.சேகர் அதிரடி

 

அதிமுக – பாஜக கூட்டணி உறுதி: எஸ்.வி.சேகர் அதிரடி

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளதாக பாஜக பிரமுகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.

கரூர்: அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளதாக பாஜக பிரமுகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக வியூகம் அமைத்து வருகிறது. அதேபோல் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங் – விசிக – மதிமுக – இடதுசாரிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது. 

ஆனால் கூட்டணி குறித்து அதிமுகவோ, பாஜகவோ இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றன. அதேசமயம் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கரூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், பாஜக மத்திய அரசுக்கு உண்டான கடமைகளை சரியாக செய்து வருகிறது. அதேபோல் அதிமுக மாநில அரசுகளுக்கு உண்டான கடமைகளை செய்து வருகிறது. எனவே இரு அரசுகளும்  நட்புடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்த நட்பு கண்டிப்பாக கூட்டணியாக மாற வாய்ப்புள்ளது என்றார்.