அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல் !

 

அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல் !

சில நாட்களுக்கு முன்னர், பருவ மழை வலுப்பெற்றதால் மழை வெளுத்து வாங்கியது. இதனால், நீர் நிலைகள் நிரம்பிப் பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறின.

அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தமிழகத்தில் பருவ மழை தொடங்கியதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், பருவ மழை வலுப்பெற்றதால் மழை வெளுத்து வாங்கியது. இதனால், நீர் நிலைகள் நிரம்பிப் பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறின. தற்போது மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ttn

வரும் 13 ஆம் தேதி அதாவது நாளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை உப்பிய வாய்ப்புள்ளதாகவும், 14 ஆம் தேதி கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வைப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.